இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 மார்ச், 2009

கூகுள் மொபைல் ஹெல்ப்






தொடர்ந்து ஏதேனும் புதுவகையான வசதியினைத் தந்து வரும் கூகுள் அண்மையில் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு உதவிடும் வகையில் மொபைல் ஹெல்ப் போரம் (Google Mobile Help Forum) என்று ஒரு அமைப்பினைத் தன் இணைய தளத்தில் திறந்துள்ளது. மொபைல் போன் சார்ந்த உங்கள் கேள்விகளுக்கு இதில் தீர்வாகப் பதில்கள் கிடைக்கலாம். இதனைhttp:// www.google. com/support/ forum/p/ Google+ Mobile?hl=en என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் அணுகலாம்.

உங்கள் மொபைல் ரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன் நீங்களும் பிறரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் வகையில் பதில் தகவல் களை வழங்கலாம். கேள்வி பதில் தொகுப்பில் தேடி அறியும் வகையில் புதிய பார்மட் ஒன்றில் அவை வழங்கப் படுகின்றன. கூகுளுக்கே உரிய சிறப்பான தேடல் இஞ்சின் மூலம் நம் பிரச்சினைகளைப் பல வழிகளில் அமைத்துத் தேடலாம். சிறப்பான தீர்வு களைத் தருபவர் கள் சிறப்பிக்கப்படும் பகுதியும் தரப்பட்டுள்ளது. இந்த போரத்திற்கு இமெயில் மூலமாகவும் உங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக