1. வேர்ட் டிப்ஸ் :
பாராவைப் பிரிக்கும் பக்கத்தை நீக்க
வேர்டில் ஒரு டாகுமெண்ட் தயாரிக்கையில் அந்த பக்கம் முடிவுக்கு வந்தால் அது பாராவாக இருந்தாலும் குறுக்கே பக்கத்தைப் பிரிக்கும் கோடு வரும். இது தேவையற்றதாகத் தெரியும். டெக்ஸ்ட்டின் போக்கின் குறுக்கே வருவதாக உணர்வோம். நாம் ஏதாவது அறிவியல் கட்டுரை எழுதுவோம். பாரா பிரியாமல் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என விரும்புவோம். பிரிந்தால் சரியான முறையில் கருத்துக்களைச் சொன்ன திருப்தி கிடைக்காது. இதனைத் தடுக்கும் வழி வேர்ட் 2003ல் உள்ளது. பாராவைப் பிரிக்கும் கோடு வராமல் பார்த்திட பாரா பாராவாக அமைக்கலாம். அல்லது மொத்தமாக பல பாராவிற்கும் பொதுவாக அமைக்கலாம். இதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. ஒரு பாராவை அல்லது பல பாராவை குரூப்பாகச் சேர்த்து மவுஸால் ரைட் கிளிக் செய்திடவும்.
2. அதிலிருந்து கிடைக்கும் பாப் அப் மெனுவில் "Paragraph" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. "Paragraph" என்னும் தலைப்பின் கீழ் பல டேப்கள் அடங்கிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் "Line and Page Breaks"என்ற டேபைக் கிளிக் செய்திடவும். பின்னர் "Keep lines together"என்ற டெக்ஸ்ட் உள்ள இடத்தில் உள்ள பாக்ஸைச் செக் செய்திடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிடவும். இதன் பின் பாராவிற்குக் குறுக்கே பக்கத்தைப் பிரிக்கும் கோடு வராது.
2. வேர்டில் கர்சரை மட்டும் நகர்த்த
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணு கிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செ ல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத் தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத் தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா
3. டூல் பார் பட்டன் எதற்காக?
டூல் பாரினைக் காண்கையில் அதில் பல பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் படங்கள் சில வேடிக்கையாகவும் தரப்பட்டுள்ளன. பல வேளைகளில் இவை எதற்கானவை என்று தெரியவில்லை எனப் பல வாசகர்கள் நமக்கு கடிதங்கள் எழுதி உள்ளனர். இந்த பட்டன்களின் அருகே உங்கள் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். உடனே மஞ்சள் கட்டத்தில் இந்த டூல் பார் ஐகான் எந்தப் பணிக்கென கட்டம் கட்டி சுட்டிக் காட்டப்படும்.
4. எக்ஸெல் டிப்ஸ்
ஆண்டு தலைப்பாக
எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட் தயாரிக்கையில் ஏதேனும் ஒரு ஆண்டினை அதன் தலைப்பாகத் தர விரும்புகிறீர்களா? அப்படியானால் எக்ஸெல் இந்த எண்ணை எண்ணாகக் கருதாமல் சொல்லாகக் கருத வேண்டும். இல்லையா? இதற்கான வழி இதோ: எண்ணுக்கு முன்னால் அபாஸ்ட்ரபி என்னும் அடையாளத்தை அமைக்கவும். எடுத்துக் காட்டாக 2009 என அமைத்தால் 2009 எண்ணாகக் கருதப்பட மாட் டாது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அடையாளம் செல்லில் தெரியாது.
5. பார்முலாவில் கமெண்ட்
எக்ஸெல்லில் கொடுக்கப்பட்டுள்ள பார்முலாவில் கமெண்ட் அமைத்திட பார்முலா முடிவில் +அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். அடுத்து N என்று டைப் செய்து பின் அடைப்புக் குறிக்குள் தேவைப்படும் செய்தியை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக பார்முலாவும் கமெண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. =CurrentAssets / CurrentLiabilities+ N ("The formula returns Current Ratio")
6. எக்ஸெல் தொகுப்பில் செல் அகலம்
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! எத்தனை முறை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் செல் ஒன்றின் அகலத்தை அடுத்தடுத்து பல முறை மாற்றி அமைத்துள்ளீர்கள். அனைத்தும் ஒன்றாக அல்லது ஏதேனும் ஒரு ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு மாற்றி இருக்கிறீர்கள். இதற்கு எந்த எந்த மெனுக்கள் எல்லாம் சென்றிருக்கிறீர்கள். Format menu, Column submenu, Width choice எனப் பல முறை கிளிக் அடித்திருப்பீர்கள். இருப்பினும் நீங்கள் விரும்பியபடி செல் அகலம் அமைந்ததா? ஏதேனும் ஒரு நேரத்தில் சரி இப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டீர்கள், இல்லையா? இதற்குப் பதிலாக செல் ஒன்றின் அகலத்தை காபி செய்து அப்படியே அடுத்த அடுத்த செல்களுக்கு அதனை காப்பி செய்திருக்கலாமே! இதற்கு முதலில் செல் ஒன்றை செலக்ட் செய்திடுங்கள். இதில் நீங்கள் விரும்பும் அகலத்தில் உள்ள செல்லினைத் தேர்ந்தெடுங்கள். இந்த செல்லை காப்பி பட்டன் அழுத்தி அல்லது Ctrl + C, / Edi அழுத்தி காப்பி செய்திடுங்கள். அல்லது Edit மெனு சென்று Copy என்பதை தேர்ந்தெடுத்தும் செய்திடலாம். இனி புதிய அகலம் தேவைப்படும் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எடிட் மெனு சென்று Paste Special என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். . Paste Special விண்டோவில் இந்த வேலைக்காகவே Column Width என்ற ஆப்ஷன் கிடைக்கும். இதனை செலக்ட் செய்து ஓகே பட்டன் கிளிக் செய்தால் இனி இந்த செல் அதே அகலத்தில் இருக்கும். டேட்டா எதுவும் காப்பி செய்திடாமல் செல்லின் அகலம் காப்பி ஆகிவிட்டதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக