இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

வேர்ட் டெக்ஸ்ட்டில் எண்கள்











வேர்டில் டாகுமெண்ட்களை அமைக்கும்போது அதில் எண்கள் கொண்ட டெக்ஸ்ட்களை அமைப்போம். நீங்கள் வரிகளுக்கு எண்களைக் கொடுக்க ஆரம்பித்தவுடன் டாகுமெண்ட் தானாக வரிசையாக எண்களைத் தர ஆரம்பிக்கும். ஓகே. இதில் பிரச்சினை எங்கு வருகிறது? ஒரு வாசகர் எண்களுக்கும் டெக்ஸ்ட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி எண்களில் உள்ள இலக்கங்கள் அதிகரிக்கும்போது கன்னா பின்னாவென இருப்பதாகக் கூறி இதனை ஒழுங்கு செய்ய வழி என்ன என்று கேட்டுள்ளார். இதே உதவியை வேறு வகைகளிலும் பல வாசகர்கள் கேட்டுள்ளனர். வழி தேடியபோது செட்டிங்ஸ் வழி ஒன்று கிடைத்தது.

1. எந்த டெக்ஸ்ட் வரிகளில் இந்த பிரச்னை இருந்து மாற்ற விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பொதுவாக நாம் பட்டியல் போலக் காணப்படுகிற அனைத்தையுமே தேர்ந்தெடுப்போம்.


2. Format மெனுவில் Bullets and Numbering பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Bullets and Numbering டயலாக் பாக்ஸைக் காட்டும். Number டேப்பினை தேர்ந்தெடுக்கவும்.

3. பின் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Customize Numbered List கிடைக்கும்.

4. Number Position controls ஐப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ்ட்டில் எண்கள் எப்படி நேர் வரிசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும்.

5. Text Position என்பதில் எண்கள் உள்ள ஐட்டங்கள் எந்த மார்ஜினில் அமைய வேண்டும் என்பதையும் வரையறை செய்திடவும். சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரண்டும் ஒரே அளவில் அமைவது நல்லது.

6. இரண்டு டயலாக் பாக்ஸ்களிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.



மவுஸ் பாய்ண்டரை மறைக்க


வேர்ட் மற்றும் பேஜ் மேக்கர் போன்ற டெக்ஸ்ட் ப்ராசசிங் தொகுப்புகளில் நாம் டைப் செய்திடுகையில் மவுஸ் கர்சர் நம்முடைய பணியில் குறுக்கிடும். சில வேளைகளில் இது நம் வேலைக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாக இருக்கும்.


இந்த வேளையில் மவுஸ் பாய்ண்டர் எதற்கு? மறைத்து வைத்து பின் வேண்டும் போது பெற்றுக் கொள்ளலாமே என்று எண்ணத் தோன்றும். அதற்கான செட்டிங்ஸைப் பார்க்கலாம். முதலில் எனச் Click Start>Settings>Control Panelகச்ணஞுடூ செல்லவும். இதில் Mouse என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். இனி மவுஸ் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் Pointer Options என்பதில் கிளிக் செய்திடவும். இதில் செக் பாக்ஸ் ஒன்றுடன் "Hide Pointer While Typing"என்ற பிரிவு இருக்கும். இதில் செக் மார்க் செய்து பின் Apply கிளிக் செய்து ஓகே அழுத்தி வெளியே வரவும். இனி மவுஸின் கர்சர் இருக்காது. மீண்டும் வேண்டும் என்றால் மேலே சொன்ன இடத்தில் செக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக