இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

கேள்வி - பதில்

1. கணிப்பொறி செயல்திறனையே முடங்கச் செய்யும் வைரஸ்கள் தானாக இணையத்தில் உருவாகுமா? அல்லது யாரேனும் தயாரித்து அனுப்புகின்றனரா?

வைரஸ் புரோகிராம்களை விஷமிகள்தான் உருவாக்குகின்றனர். கம்ப்யூட்டரில் இமெயில் வழியாகவும், பிளாப்பி,சிடி மற்றும் பிளாஷ் டிரைவ் வழியாகவுமே அவை பரவுகின்றன. கம்ப்யூட்டரில் தானாக வைரஸ் உருவாகாது.


2.நான் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். டிபால்ட்டாக Task Pane கிடைக்கிறது. இதனை மாற்ற முன்பு நீங்கள் எழுதியபடி Tools>Options கட்டளையைக் கொடுத்து Startup Task Pane என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டும் அது தெரிகிறது. ஏன்? இதனை முற்றிலுமாக நீக்க வழி என்ன?

ஏன் மீண்டும் வருகிறது என்று புரியவில்லை. நீங்கள் செட் செய்த பின்னர் மீண்டும் அது வரக் கூடாது. இதனை நிரந்தரமாகத் தடுக்க ஒரு வழி உள்ளது. Start >Run கட்டளை கொடுத்து கிடைக்கும் பாக்ஸில் Regedit என்று டைப் செய்தால் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்திட முடியும். இப்போது ரெஜிஸ்ட்ரி கிடைத்தவுடன்



HKEYCURRENTUSER/SOFTWARE/MICROSOFT/OFFICE/11.0/ COMMON/GENERAL என்ற கீயைத் தேடி அது இருக்குமிடம் கன்டு எடிட் செய்திடத் தயாராகுங்கள். இதன் வலது பக்கம் உள்ள பிரிவில் Do not dismiss File New Task Pane என்று இருப்பதைப் பார்க்கவும். அதில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். பின் அதற்கான மதிப்பு தரும் இடத்தில் 0 கொடுங்கள். இனி டாஸ்க் பேன் உங்களுக்குக் காட்டப்பட மாட்டாது.

3.நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயாரித்தேன். இப்போது அருமையான சிறிய வீடியோ மூவி ஒன்று கிடைத்துள்ளது. இதனை அந்த பிரசன்டேஷனில் இணைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். எப்படி இணைப்பது என்று விளக்கவும்.

இதற்குப் பல வழிகள் உள்ளன சுரேஷ் குமார். உங்களுக்கு எது எளிதானது என்று பார்த்துப் பயன்படுத்தவும். Insert Movies and Sounds என்ற கட்டளை மூலம் இதனை நிறைவேற்றலாம். இதனைக் கொடுத்தவுடன் வீடியோவினைக் காட்ட விண்டோ ஒன்று காட்டப்படும். விண்டோவில் கிளிக் செய்தால் வீடியோ இயங்கும். இந்த பிரசன்டேஷனை எடுத்து செல்கையில் அந்த வீடியோ கிளிப்பினையும் அதே போல்டரில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.

அடுத்ததாக Insert Object என்ற கட்டளையைக் கொடுங்கள். கிடைக்கும் மெனுவில் Windows Media Player என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். இவ்வழியிலும் வீடியோவினை இயக்கலாம். Insert Object கட்டளையைக் கொடுத்து அதில் Windows Media Player என்பதைத் தேர்வு செய்வது பவர்பாயிண்ட் தரும் இரண்டாவது வழியாகும். மீடியா பிளேயரை ரைட்-கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆப்ஜெக்டிற்கான கண்ட்ரோல்களை நீங்கள் கொண்டு வரலாம். Custom என்பதைக் கிளிக் செய்து வீடியோ பைலைத் தேர்வு செய்யலாம். வால்யூம் கண்ட்ரோல், ஸ்லைடர் பார் போன்றவற்றைக் கொண்டு வரவும், வீடியோவை பெரியதாக்கி முழுத் திறையில் வெளிப்படுத்தவும், அடையாளப்படுத்தப்பட்ட வீடியோ காட்சிக்கு தாவவும் இந்த Insert Object வழி யைப் பயன்படுத்தலாம். இந்த வழிகளில் இணைக்கப்படும் வீடியோ காட்சிகள் ரியல் வீடியோ மற்றும் குயிக் டைம் வீடியோக்களுக்கு உகந்தவை அல்ல. ஆனால் இந்த வகை வீடியோ தான் இணைக்க வேண்டும் என்றால் Slide Show மெனுவின் கீழ் காணப்படும் Action Button வழியே சிறந்தது. பவர்பாயிண்டினுள் எந்த அப்ளிகேஷனையும் இயக்க Action Button உதவுமாதலால் அதைப் பயன்படுத்தி ரியல் வீடியோ அல்லது குயிக் டைம் பிளேயரை இயக்கிவிடலாம். Action Button கிளிக் செய்தால் பிளேயர் இயங்கி வீடியோ ஓட ஆரம்பிக்கும்.


4.வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்று அமைத்தேன். இது டாகுமெண்ட்டின் இடது ஓரத்தில் அமைந்துள்ளது. இதனை நடுவில் கொண்டு வர முயற்சி எடுத்தால் சரியாக அமையவில்லை. எப்படிச் சரியாக நடுவில் கொண்டு வருவது?

எளிதாக இதனை மேற்கொள்ளலாம். டேபிளில் ரைட் கிளிக் செய்திடவும். வேர்டில் உடனே ஒரு காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இந்த மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேபிள் ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டேபிள் என்னும் டேப் தேர்ந்தெடுங்கள். பின் Center என்பதில் கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னவென்று நீங்கள் கூறவில்லை. உங்களுடையது விண்டோஸ் 97 ஆக இருந்தால் மேலே சொல்லப்பட்ட வழிகள் செயல்படாது. கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும். டேபிளின் உள்ளாக கர்சரைக் கொண்டு செல்லவும். பின் Table menu விலிருந்து Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவிலிருந்து டேபிள் செல்லின் உயரம் மற்றும் அகலத்தைத் (Cell Height and Width) தேர்ந்தெடுக்கவும். இப்போது செல்லின் அகலம் மற்றும் உயரம் செட் செய்திடும் டயலாக் பாக்ஸ் படுக்கை வரிசைக்கான டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிடைக்கும். இனி அங்கு இருக்கும் சென்டர் என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக