1.விண்டோஸ் 3.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரு மாதங்களில் 30 லட்சம் காப்பிகள் விற்பனை செய்யப்பட்டன.
2.ஆங்கிலத்தில் உள்ள டைப் ரைட்டிங் கீ போர்டு (Qwerty)130 ஆண்டுகள் பழமையானது.
3.ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான் லாஜி பெய்ர்ட் முதன் முதலில் தன் கண்டுபிடிப்பான தொலைக் காட்சிப் பெட்டியை பொதுமக்களுக்கு 1926ல் லண்டனில் காட்டினார். பத்தாண்டுகளுக்குப் பின்னரும் உலகில் மொத்தம் 100 டிவி பெட்டிகளே இருந்தன.
4.விண்ணைத் தொடும் தோற்றத்தில் உள்ள பல மாடிக் கட்டடங்களை ஆங்கிலத்தில் ஸ்கை ஸ்கிரேப்பர் என அழைக்கிறோம். முதன் முதலில் இந்த சொல்லை 11 மாடிகளே இருந்த கட்டடத்தை அழைக்கப்பயன்பட்டது.
5.இன்று உலகில் 60 கோடிக்கு மேலாக தொலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் உலகின் ஜனத்தொகையில் பாதிக்கு மேலானவர்கள் இன்னும் தொலைபேசியில் ஒரு முறை கூடப் பேசியது இல்லை.
6.முதல் இமெயில் செய்தி 1972ல் அனுப்பப்பட்டது. முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட இணைய தளத்தின் பெயர் Symbolics.com.
7.80 அடி நீளம், 30 டன் எடை, 17,000 ட்யூப்கள் கொண்டு முதல் முதலில் இது தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. என்ன இது? கடல் நீரில் இருந்து குடி நீர் தயாரிக்கும் இயந்திரமா? இல்லை எனியாக் என அழைக்கப்பட்ட முதல் கம்ப்யூட்டர் தான் இத்தனை பெரிசு. அந்த கம்ப்யூட்டரைக் காட்டிலும் இன் றைய கம்ப்யூட்டர் 50 ஆயிரம் மடங்கு வேகத்தில் இயங்குகிறது. 10 லட்சம் மடங்கு கூடுதல் தகவல்களைச் சேமிக்கிறது.
8.உலகில் நான்கு பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களைப் பட்டியல் இட்டால் முதல் நான்கு இடங்களில் மைக்ரோசாப்ட், அடோப், சாப் மற்றும் கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் (Microsoft, Adobe, Sap, Computer Associates) ஆகியவை இடம் பெறுகின்றன. சின்ன கம்ப்யூட்டரிலிருந்து பெரிய மெயின் பிரேம் கம்ப்யூட்டர் வரை அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளில் 264 கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
9.கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் ஒரு நிமிடத்தில் ஏழு முறை தான் தன் கண்களைச் சிமிட்டுகிறார். இது சராசரி மனிதன் செய்வதில் பாதி கூட இல்லை. சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு 20 முறை சிமிட்டுகிறான்.
10.அகரவரிசையில் எழுத்துக்களைக் கொண்டு அமைந்த பெரிய ஆங்கிலச் சொல் எது தெரியுமா?Almost.
11.அமைதியாய் இருக்க வேண்டும். அடுத்தவர் சொல்வதற்கு செவி மடுக்க வேண்டும். ஆங்கிலத்தில் இந்த இரண்டு சொற்களுக்கும் (Silent / Listen)ஒரே எழுத்துக்கள் தான் என்பதைக் கவனித்தீர்களா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக