இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஏப்ரல், 2009

விற்பனைக்கு அல்ல... சாதனைக்காக!


லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெற, 180 மி.லி., கிராம் தங்கத்தை பயன்படுத்தி, அழகாய், சின்னதாய், ஒரு சைக்கிள் வடிவமைத்துள்ளார், கோவை தங்க நகை தொழிலாளி வெங்கடேஷ்.

புலியகுளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(23). ஏழாம் வகுப்பு படித்த இவர், ஆர்.எஸ்.புரம் மெக்ரிக்கர் ரோட்டிலுள்ள நகைப் பட்டறையில் பணியாற்றுகிறார். சமீபத்தில், இரண்டு கிராம் தங்கத்தில் சைக்கிள் தயாரித்தவர், "லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். அந்த எடைக்கும் குறைவான தங்கத்தை பயன்படுத்தி, சைக்கிள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பத்து மணி நேரத்தில் 180 மி.லி.,கிராம் தங்கத்தில் "மினியேச்சர் சைக்கிள்' தயாரித்துள்ளார். இதே போன்று வெள்ளியிலும் சைக்கிள் தயாரித்துள்ளார்.

நகைத்தொழிலாளி வெங்கடேஷ் கூறுகையில், ""லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற தங்கத்தில் சைக்கிள் தயாரித்துள்ளேன். தங்கத்தின் அளவை மேலும் குறைத்து இதை விட சின்னதாய் ஒரு சைக்கிள் தயாரிப்பேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக