
ஸ்பேம் மெயில் ஏதாவது ஒன்று அடிக்கடி வருகிறதா? அதற்குத் தொடர்ந்து நூறு முறை ஒரே நாளில் பதில் மெயிலை அனுப்பிப் பாருங்கள். அனுப்பியவரின் சர்வர் நிச்சயம் தடுமாறும். ஸ்பேம் மெயில் அனுப்புவது தடைபடும். தொடர்ந்து ஸ்பேம் மெயில் அனுப்ப இயலாமல் போகும்.
முன்பெல்லாம் ஆப்பிரிக்க வங்கியில் கோடிக்கணக்கில் டாலர் உள்ளது.சிறிய அளவில் முன்பணம் கொடுத்தால் கோடிக்கணக்கான டாலர் கிடைக்கும்; உங்கள் அக்கவுண்ட் எண் மற்றும் பாஸ்வேர்ட் கொடுங்கள் என்று மெயில்கள் வரும். இப்போது என் நண்பன் வெளிநாட்டில் விபத்தில் மாட்டிக் கொண்டான். சிகிச்சைக்குப் பணம் வேண்டும். சிறிய அளவிலாவது உதவுங்களேன் என்று சொல்லி மெயில்கள் வருகின்றன. ஜாக்கிரதை! இது போன்ற மெயில்களை உடனே அழித்து விடுங்கள். விளையாட்டிற்குக் கூட இதற்குப் பதில் போட்டுப் பார்ப்போமே என்று முயற்சிக்க வேண்டாம். கூகுள் பெறும் தேடல்களில் பாதிக்கு மேல் அமெரிக்கர்கள் அனுப்புகின்றனர். ஒவ்வொரு நொடியிலும் 2000 க்கு மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில்கள் அனுப்பப்படுகின்றன.
மைக்ரோசாப்ட், பே பால், பிரபலமான வங்கிகள் ஆகியவற்றின் பெயரில் உங்களுக்கு இமெயில்கள் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் பிரச்சினை உள்ளது என்றும் அதனைச் சரி செய்திட இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். வேண்டாமடா சாமி! என்று மெயிலை அழித்திவிடுங்கள். எல்லாம் போலி. லிங்க்கை கிளிக் செய்தால் அந்த நிதி நிறுவனத்தின் லோகோ எல்லாம் போட்டு உங்களுக்கு ஒரு தளம் கிடைக்கும். நீங்களும் உண்மை என்று எண்ணி உங்கள் வங்கி அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் எல்லாம் தருவீர்கள். அவ்வளவுதான்! பாடுபட்டு சேர்த்த பணம் எல்லாம் அம்பேல். யாஹூ! இந்த பெயர் எப்படி வந்தது. ஆனந்தத்தில் கூக்குரலிடும் சொல்லா? இல்லை. Yet Another Hierarchical Officious Oracleஎன்பதன் சுருக்கம் தான் யாஹூ. ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டிருந்த டேவிட் பைலோ மற்றும் ஜெரி யாங் இணைந்து இந்த பெயரினை உருவாக்கினார்கள். 2002ல் நாளொன்றுக்கு சராசரியாக 7 ஸ்பேம் மெயில்கள்தான் ஒருவருக்கு வந்து கொண்டிருந்தன. இப்போது அது 800 ஐத் தாண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக