யார் வீட்டுச் சொத்து?
இந்தியாவின் பாராளுமனறத்திற்கான பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலின் பொழுது முக்கியமான தேர்தல் பிரச்சினை என்ன? அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடந்த பொழுது பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே முக்கியமான பிரச்சினையாக இருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தை முன்னேற்றுவேன் என்று ஒபாமா அளித்த உறுதி மொழியின் காரணாமாகவும், புஷ்ஷின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும், வேலை இழப்புமே அமெரிக்க தேர்தலில் முக்கியமான பிரச்சினையாக அமைந்தது. அது போல இந்தியத் தேர்தலில் அப்படி எதுவும் அகில இந்திய பிரச்சினை எதுவும் மக்களால் அலசப் படுகிறதா? மீடியாக்களால் அலசப் படுகிறதா? வேட்ப்பாளர்கள் பேசுகிறார்களா?
தமிழ நாட்டில் மக்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப் படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களின் கல்லறைத் திருநாளுக்கு அரசு விடுமுறை விடுவோம் என்கிறார் ஜெயலலிதா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெருசலம் போவதற்கு மான்யம் தருவோம் என்கிறார் ஜெயலலிதா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கலர் டி வி தருவோம் என்கிறார் சந்திரபாபு நாயுடு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேபிள் டி வி தருவோம் என்கிறார் கருணாநிதி. மக்களுக்கும் தெருவில் விளக்கு எரியாததும், சாக்கடையும், ரேஷன் கடையில் அரிசி இல்லாததும், குழாயில் தண்ணீர் வராததுமே பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. யாருக்குமே இது இந்திய அளவில் நடக்கும் பொதுத் தேர்தல். இந்தியாவின் தலை விதியை நிர்ணயிக்கப் போகும் தேர்தல் என்ற உணர்வும் அறிவும் இல்லை.
இந்தியாவில் இன்றைய தேர்தலில் பற்றி எரியும் பிரச்சினையாக மூன்று பிரச்சினைகள் இருந்திருக்க வேண்டும்
1. இந்தியாவின் பொருளாதார எதிர்காலம்
2. மும்பை போன்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பொது மக்களைப் பாதுகாத்தல்
3. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், தரமான கல்வி, பாதுகாப்பான குடிநீர், சாலை வசதிகள், அடிப்படைச் சுகாதார வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தி அளித்தல்
ஆனால் மேற்கண்ட மூன்று பிரச்சினைகளைப் பற்றி மக்களும் சரி அரசியல்வாதிகளும் சரி யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஒரு வியாபார பேரம் போல கூட்டணி அமைத்து ஜெயித்துப் போய் மத்திய அரசின் திட்டங்களில் சம்பாதித்து தங்கள் குடும்பங்களை வளர்த்துக் கொள்வதே ஒரே நோக்கமாக இந்தத் தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட தலையாய பிரச்சினைகளில் முதல் பிரச்சினை இந்தியாவின் பெருளாதார முன்னேற்றம். அதை எப்படிச் செய்யப் போகிறார்கள். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டு வந்த வளர்ச்சி தேங்கி விட்டது. இனி வரும் ஆண்டுகளில் எப்படி வேலை வாய்ப்புக்களை உருவாக்கப் போகிறார்கள்? எப்படி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்கள். வோட்டுக்காக அரசு ஊழியர்களுக்கு பெரும் சம்பள உயர்வை அறிவித்து விட்டார்கள். அதனால் ஏற்படப் போகும் வீக்கத்தை எப்படிக் கட்டுப் படுத்தப் போகிறார்கள்? என்று பல பயங்கரமான கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அதைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.
இந்தியாவை உலகின் பணக்கார நாடாக ஆக்குவதற்கு உண்டான ஒரு மந்திரக் கோல் இந்தியாவின் வாக்காளர்களிடம் இருக்கிறது. ஆம் இந்தியா அமெரிக்காவைப் போல வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான சாவி நம் மக்களின் கைகளில் இருக்கிறது. சந்திர குப்தரின் காலம்தான் இந்தியாவின் பொற்காலம் என்ற வரலாற்றை மாற்றி 2009 முதல் இந்தியாவின் பொற்காலம் துவங்குகிறது என்ற நிலையை ஏற்படுத்தக் கூடிய சக்தி நம் வாக்காளர்களிடம் இருக்கிறது. அது என்ன? எப்படி? எங்கிருந்து அவ்வளவு நிதி வரும்?
மந்திரம் மாயம் எதுவும் இல்லை. இந்தியாவில் முறை கேடாக சம்பாதித்த கோடானு கோடிக்கணக்கான ரூபாய்களை நம் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், நடிகர்களும் உலகத்தின் வரி கொடுக்காமல் ஏமாற்றும் கிரிமினல்கள் தங்கள் சொத்தைப் பதுக்கி வைக்கும் சொர்க்க புரிகளான பல நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். உலகமெங்கிலும் அப்படி பதுக்கி வைத்துள்ள பணத்திலேயே மிக அதிகமான பணம் இந்திய அரசியல்வாதிகளால்தான் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக நாம் ஓட்டுப் போட்டு நமக்காக சேவை செய்ய அனுப்பிய தென் சென்னை தொகுதி எம்பியும் மந்திரியுமான டி ஆர் பாலு மட்டுமே தனது பிரதமரான மன்மோகனுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக இந்த கள்ள வங்கிகள் இருக்கும் நாடுகளுக்கு பல முறை ரகசியப் பயணம் மேற் கொண்டிருக்கிறார். எதற்காகப் போனார் என்பதை இன்று வரை தனக்கு ஓட்டுப் போட்ட மக்களிடமோ தான் இருக்கும் மந்திரிசபையிடமோ அல்லது அரசிடமோ சொல்ல மறுத்து வருகிறார். இவரைப் போல இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை இந்த வங்கிகளில் தொடர்ந்து பதுக்கி வந்திருக்கிறார்கள் என்று சந்தேகப் படப் படுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இப்படி கள்ளத்தனமாக பதுக்கிய பணத்தின் மதிப்பு மட்டும் இப்பொழுது கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் இந்தியக் கணக்கில் மட்டுமே இருப்பதாக ஒரு கணக்குக் கூறுகிறது. ஸ்விஸ் நாட்டு மந்திரியும், தூதுவரும் கூட இந்தியாவில் இருந்துதான் மிக அதிகமான பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது, இந்தியா முறையாகக் கேட்க்குமானால் நாங்கள் விபரங்களைத் தருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் போபர்ஸ் குவாட்ராச்சியின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போக அனுமதித்த இத்தாலிய ராணியின் காங்கிரஸ் அரசு அல்லவா இந்தியாவை ஆளுகிறது. எப்படி ஸ்விஸ் நாட்டில் போய் இந்த ஊழல் காங்கிரஸ்காரர் கேட்க்கப் போகிறார்கள்?
2 டிரில்லியன் டாலர்கள் என்றால் எத்தனை சைபர் போட வேண்டும் என்று யாருக்காவது தெரியுமா? 1 டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன், ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் டாலர்கள். ஆக ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் ஆயிரம் மில்லியன் டாலர்கள். ஒரு மில்லியன் டாலர் என்பது இந்திய பணத்தில் 5 கோடி ரூபாய். அப்படியானால் ஒரு டிரில்லியன் என்பது இந்தியப் பணத்தில்
ரூ 5,00,00,00,00,00,000 ரெண்டு டிரில்லியன் என்பது 10,00,00,00,00,000 ரூபாய்கள். இவ்வளவு பணம் இல்லையென்றாலும் கூட இதில் கால் வாசி பணம் இருந்தாலே இந்தியா இன்னும் பல வருடங்களுக்கு வரியே விதிக்காமல் பட்ஜெட் போடலாம். அமெரிக்கா மாதிரி சாலைகள், பாலங்கள் கட்டலாம்., நதிகளை இணைக்கலாம். இந்தியா நிஜமாகவே ஜொலிக்கும் சொர்க்க புரியாக மாறி விடும். மற்றும் ஒரு கணக்கின் படி இந்தியாவின் பணமாக 25 லட்சம் கோடி ரூபாய்கள் ஸ்விஸ் மற்றும் பிற கள்ள வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இப்படி எந்த வகையினில் பார்த்தாலும் இந்திய அரசியல்வாதிகளினாலும், கள்ள வியாபாரிகளினாலும் சட்டத்தை ஏமாற்றி வரி கட்டாமல் உலகத்தின் பிற மூலைகளில் கள்ளத்தனமாக ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் சொத்துக்களை இந்தியா திருப்பி பெற்றாலே இந்தியா சொர்க்கபுரியாக மாறி விடும்.
அப்படி ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களில் யார் யார் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு லிஸ்ட் ஒன்றை ஜெர்மன் அரசாங்கத்தின் கையில் உள்ளது. இந்திய அரசாங்கம் அந்த லிஸ்டைக் கேட்டால் நாங்கள் தரத் தயார் என்று ஜெர்மன் அமைச்சர் சொல்லி விட்டார். பாராளுமன்றத்தில் அத்வானி கரடியாகக் கத்திய பின்னரும் யோக்கியவான் மன்மோகனும் அவரது நிதி மந்திரி சிதம்பரமும் வாயைத் திறக்க மறுத்து விட்டார்கள். மன்மோகன் அப்படியெல்லாம் நான் கேட்க்க முடியாது என்று மறுத்து விட்டார். ஆக நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசும் அதன் யோக்கிய மந்திரி மன்மோகனும் பிடிவாதமாக இந்தக் கள்ளப் பணத்தைத் திருப்பி பெறுவதற்கான முதல் கட்ட முயற்சி கூட எடுப்பதற்கு பிடிவாதமாக மறுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
அப்படி பல முறை பாராளுமன்றத்தில் அத்வானி கேட்ட பின்னாலும் மன்மோகனும் அவரது அரசும் ஜெர்மன் அரசிடம் பட்டியலைக் கேட்க்க மறுத்து விட்டபடியால் இந்த பொதுத் தேர்தலில் அதை ஒரு முக்கியமான விவாதப் பிரச்சினையாக அத்வானியும் பா ஜ க கட்சியும் மாற்றி விட்டார்கள். இருந்தாலும் இதன் முக்கியத்துவம் மக்களிடம் இன்னும் முழுமையாகப் போய் சேரவில்லை.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நூறு நாட்களுக்குள்ளாகவே ஸ்விஸ் வங்கிகளிலும் பிற நாட்டு வங்கிகளிலும் இந்திய அரசை ஏமாற்றி சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்று அத்வானி தேர்தல் அறிக்கையாகவும், உறுதி மொழியாகவும் அளித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை எழுப்பியதற்காகவே அத்வானி மீது கடும் கோபத்தில் உள்ளது. அவர்கள் இது குறித்து பேசுவதற்குக் கூட மறுத்து வருகிறார்கள். ஆக அப்படி கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் சொத்துக்கள் பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் தி மு க போன்ற கட்சிப் பிரமுகர்களின் சொத்துக்கள் என்பது உறுதியாகிறது.
இத்தனை நாள் ஏன் அத்வானி இந்தப் பணத்தைக் கொண்டு வருவது பற்றி பேசவில்லை என்று நீங்கள் கேட்க்கலாம். இத்தனை நாட்களாக ஸ்விஸ் வங்கிகளை எந்த மேற்கு நாடுகளும் கண்டு கொள்ளவில்லை. உலகில் தீவீரவாதமும் கடுமையான பொருளாதாரத் தேக்கமும் ஏற்பட்ட பின்னால் பல நாடுகளும் குறிப்பாக அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற வல்லரசுக்கள் இது போன்று கள்ளப் பணம் தங்கள் நாட்டிற்குத் திருப்பி தரப் பட வேண்டும் இல்லாவிட்டால் ஸ்விஸ் அரசாங்கம் தண்டிக்கப் படும் தனிமைப் படுத்தப் படும், உலக நாடுகளின் வெறுப்பிற்கும் தண்டனைக்கும் உள்ளாகும் என்று அறிவித்து விட்டார்கள். அதனால் வேறு வழியின்றி ஸ்விஸ் அரசு பிற நாடுகளின் சட்டத்தை ஏமாற்றி சேமித்து வைத்திருக்கும் அக்கவுண்டுகளைப் பற்றி அறிவிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது. இது சமீபத்தில் லண்டனில் ந்டந்த ஜி20 நாடுகளின் கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாகப் பேசப் பட்டது. ஆனால் இந்தியாவின் தரப்பில் சென்றிருந்த மன்மோகன் இந்த பிரச்சினையில் இந்தியாவின் நிலை பற்றியும் இந்தியாவின் ஆதரவு பற்றியும் பேச மறுத்து அர்த்தமுள்ள அமைதி காத்திருக்கிறார். ஆகவே இவ்வளவு நாட்களாக ஸ்விஸ் வங்கிகளுக்கு இருந்த் சாதகமான சூழ்நிலை இப்பொழுது மாறியுள்ளது. இந்தக் கள்ளப் பணம் மூலமாகவே உலகின் பல்வேறு பயங்கரவாதச் செயல்கள் நடத்தப் படுகின்றன ஆகவே இந்த கள்ளக் கணக்கு முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று அமெரிக்காவும் பிற நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த சமயத்தைப் பயன் படுத்தி இந்தியாவின் பணத்தையும் திருப்பிப் பெற வேண்டும் என்கிறார் அத்வானி. பா ஜ க கட்சி இதைத் தங்கள் தேர்தல் வாக்குறிதியாகவே அளித்துள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அரசும் இந்தப் பிரச்சினை பற்றி பேசவே பிடிவாதமாக மறுத்து வருகிறார்கள். ஆக இதில் யார் கள்ளர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகத் தீர்த்து இந்தியாவை ஒரு வளமிக்க நாடாக ஆக்கும் வாய்ப்பு இப்பொழுது வந்துள்ளது. மக்கள் நினைத்தால் அதை சாதிக்கலாம். பா ஜ க வின் வாக்குறுதியை நம்பி அத்வானியின் உறுதி மொழியை நம்பி அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் இந்த பல லட்சம் கோடி கள்ளப் பணத்தில் ஒரு சிறிய சதவிகிதத்தையாவது அத்வானியும் அவரது அரசும் மீட்டுக் கொண்டு வந்தால் இந்தியா நிஜமாகவே ஒளிரும். சுபிச்சம் திரும்பும். நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிட்டும். அடிப்படைச் சுகாதாரம் நமக்குக் கிட்டும். பிற வளர்ந்த நாடுகளைப் போலவே இந்தியாவும் சகல அடிப்படைக் கட்டுமான வசதிகள் நிறைந்த நாடாக மாறும். அதை மாற்ற ஸ்விஸ் வங்கிகளில் இந்திய கிரிமினல்கள் சேர்த்து வைத்துள்ள கள்ளப் பணத்தை மீட்டு வருவோம் என்று ஒரு கட்சி உறுதி மொழி கொடுக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதுதான் புத்திசாலியான எந்தவொரு வாக்காளரும் செய்யக் கூடிய விஷயமாக இருக்கும்.
நம் வீட்டில் நகைகளும் சொத்துக்களும் களவு போனால் நாம் என்ன செய்வோம்? போலீஸ்ஸுக்கு புகார் கொடுப்போம். களவு போன நம் சொத்தைத் திரும்பிப் பெரும் வரை கடுமையாக போராடுவோம். அதைப்போல நம்மிடம் இருந்து களவாடப் பட்ட நம் தேசத்தின் சொத்தினைத் திரும்பிப் பெற நாம் என்ன செய்யப் போகிறோம். அதைத் திருப்பிக் கொண்டு வருவோம் என்று சொல்லும் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஆதரவு தெரிவிக்கப் போகிறோமா அலல்து மாட்டோம் அதை நாங்கள் தொட அனுமதிக்க மாட்டோம் இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாகவே இன்னும் பல நூற்றாண்டுக்கு வைத்திருப்போம் என்று சொல்லும் காங்கிரஸ் கட்சிக்கு நாம் ஓட்டுப் போடப் போகிறோமா? தீர்மானம் செய்யுங்கள் வாக்காளர்களே. இந்தியாவில் இன்னும் ஒரு பொற்காலத்தை சந்திர குப்தன் காலத்திற்கு பின்னால் ஏற்படுத்தக் கூடிய அரிய வாய்ப்பு இந்த முறை உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. எப்படிப் பயன் படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்?
வேறு எந்த நாட்டிலும் இந்த ஸ்விஸ் வங்கி பிரச்சினை மட்டுமே பூதாகரமான எலெக்ஷன் பிரச்சினை ஆகியிருந்திருக்கும். துரதிருஷ்ட வசமாக நம் இந்தியர்களுக்கோ இது பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. இந்த பிரச்சினை விவாதிக்கப் படவேயில்லை. மீடியாக்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கின்றன. அரசியல்வாதிகளில் அத்வானியைத் தவிர வேறு யாரும் இதை பேச பிடிவாதமாக மறுக்கிறார்கள். இது ஒரு முக்கியமான நம் வாழ்வாதாரப் பிரச்சினை. நம் எதிர்காலத்தைத் முடிவு செய்யக் கூடிய ஒரு முக்கியமான விஷயம் இது. இது பற்றி இதற்கு முன் பேச முயன்ற ஆடிட்டர் குருமூர்த்தி பொய் வழக்குப் போட்டு கைது செய்யப் பட்டார். இப்பொழுது இதை ஒரு தேர்தல் பிரச்சினையாக அத்வானியும் பா ஜ க வும் எடுத்துள்ளது. இந்தியாவை ஒளிர் மயமான எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லப் போகிறோமா அல்லது மீண்டும் இருண்ட காலத்திற்குத் தள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்யுங்கள் இந்திய வாக்காளர்களே, அது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.
இந்தப் பணத்தை எப்படி திருப்பிப் பெறுவது, எவ்வளவு பணம் இப்படி திருடு போய் வேற்று நாட்டு வங்கிக் கணக்குகளில் இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய பா ஜ க ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளேன் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்
- விஸ்வாமித்ரா
Unquestioned loot - S Gurumurthy
All that the BJP leader L K Advani had perhaps intended to do — when he took up the issue of Indian black wealth stashed away in Swiss and other secret shelters — was to put the Congress party on the back foot at the time of the elections. But he would never have imagined that the Congress would go so far back as to hit its own wicket.
This is how the play opened. L K Advani told the media: the Swiss ambassador to India has himself admitted that lots of Indian black money gets secretly lodged in Swiss banks; estimates of Indian black money abroad vary from $500 billion to $1400 billion; forced by the economic crisis, the West, that is Germany, France, US and UK, which had winked at the illicit monies in the past, have begun a crusade against Swiss banks and other secret tax shelters to flush out the money; India must join the Western effort to bring back the Indian black wealth from abroad. With elections round the corner, Advani did turn the issue into a political one. He charged that the Congress was not keen to get back the Indian monies lodged abroad. He cited two instances to support the charge. First, despite his writing to the Dr Manmohan Singh in April last year to ask for the names of Indians reportedly mentioned in the secret record of LGT bank — which the German authorities had offered to open free of cost to give to all who asked for it — the government would not press for the Indian names from Germany. Second, he said that in the G20 preparatory meet in Berlin where Germany and France had called for blacklisting of Swiss and other tax havens, the Indian representatives at that meeting never opened their mouth on the issue.
Advani rounded off asking the prime minister to take up the issue of Indian monies stashed away in secret Swiss banks and in other tax havens at the G20 meet at London slated for April 2, 2009. Yet, at the London meet, Dr Manmohan Singh would not utter a word. Had he just said that India would join the G20 efforts, the Advani googly would have gone for a six. But, the Congress party went on the back-foot and hit its own wicket instead. But, why did the Congress hit its own wicket instead of a six? Read on.
“Why this now, at the time of the elections?” asked the Congress spokesman Manish Tiwari, not knowing that Advani had written to the prime minister long before, in April 2008 itself, on the LGT bank issue. Then entered Abhishek Singhvi, the more articulate spokesman of the party. He asked what did Advani do when NDA was in power. Obviously he has not even read Advani’s statement. Advani has only questioned why the Manmohan government is not acting now [in March 2008] in tandem with the West which has begun crusading against secret banking. Only now the West has turned against secret bank funds. So the question why did the BJP, or even the Congress, not act in the past does not arise. More. Singhvi said that “G20 is not the forum for the issue” of Indian black wealth in Swiss banks. Obviously, running between courtrooms and newsrooms, he had no time to follow the media abroad which were full of news about how the main agenda of G20 was about secret banking. He was all at sea. With the first two failing, entered Jairam Ramesh, the campaign manager of the party.
Like Sehwag deploying offence for defence, he wrote a harsh letter to L K Advani saying, “to tell bluntly — Mr Advani, you are lying”. Advani, he charged, was lying on his maths about the estimate of the Indian black wealth at between $500 billion and $1400 billion. These numbers, he said, were drawn from questionable Internet sources! All his shouts meant only this: “Mr Advani, the loot from India is not as big as you make it out to be”. But, when the Swiss Ambassador himself has admitted that ‘lot’ of Indian black wealth was flowing into Swiss banks, where is the need to quarrel over how big the loot from India is — as big as Advani says or as small as Jairam Ramesh thinks? The question is where does the Congress stand on the issue of bringing the hoarded Indian wealth from abroad. The three who shout at Advani are deafeningly silent on that.
The Congress campaign manager cites a well-known economist Bibek Debroy who has questioned Advani’s estimate of Indian black wealth at a minimum of $500 billion. Debroy, usually an agile and meticulous analyst, has erred in this case. He has looked at the wrong version of the right report and reached incorrect conclusions. Both Advani and Debroy have relied on the Global Financial Integrity (GFI) study that has estimated the global black wealth stashed away in tax havens including India’s. There are two versions of the GFI study — one a layman’s version and the other, the economists’ version. Debroy, an economist, seems to have relied on the layman’s version. And L K Advani, not an economist, has relied on the economists’ version. The economists’ version of the GFI study (at pages 29 and 30 supported by charts, specifically chart 18) estimates, in specific numbers the amount of black wealth stashed away from India between 2002-06 at $137.5 billion. If, in five years, the amount could be $137.5 billion (Rs 6.88 lakh crore), the Advani estimate of $500 billion (Rs 25 lakh crore) to $1400 billion (Rs 70 lakh crore) for six decades since 1947 is not wide off the mark. Bibek Debroy who seems to have looked at only the layman’s version of the GFI study, appears to have missed the specific estimate of the annual loot from India at $27.3 billion which only the economists’ version of the GFI report mentions. This is the cause of the dispute on maths. But even otherwise all maths of monies held in secrecy can only be estimates. There can be nothing final about it.
That lots of Indian black wealth is lodged in secret Swiss banks and elsewhere is undisputed. The dispute is no more about the loot from India. But only about how big that loot is. The Congress masks the undisputed fact of the loot by questioning the maths of it. Obviously the party seems frightened about the Indian black wealth abroad becoming an issue once again after 1987 when the Bofors bribe scam broke out. The Congress spokesmen do not seem to be defending their party. They are actually exposing their leader whose connections with her Italian friend Quattrocchi who got bribes from Bofors out of the defence budget of India are well known. They seem to confirm the cynical ones who ask: “Do we expect those who assisted Quattrocchi to run away with the money caught stolen from India to bring back the Indian black wealth from Swiss banks?” Understand why the Congress chose to hit its own wicket instead of hitting the Advani googly for a six?.
FAQ on the --Tax Havens etc Prof R. Vaidyanathan - IIM-Bangalore
a) Which are the various tax havens, where the ill-gotten wealth of Indian businessmen and politicians is stored?
There are presumably more than 70 Tax havens in the world. Indian wealth could be more in Switzerland and various British /US islands. At least forty countries market themselves aggressively as tax havens [Source: Internal revenue Service USA on Abusive a Off-shore Tax Avoidance schemes –Talking Points Jan 2008]
The well known Tax Havens are Switzerland/ Liechtenstein/Luxemburg/ Channel islands etc
b) How much Indian money do you think would be locked away in Swiss banks? What is the basis for the estimate you make?
Illicit Financial Flows from Developing
Countries: 2002—2006
GLOBAL FINANCIAL INTEGRITY – [GFI]
Authors DEV Kar and Devon-Cartwright Smith
A PROJECT OF FORD FOUNDATION—
Source: http://www.gfip.org/storage/gfip/executive%20-%20final%20version%201-5-09.pdf
Financial flows in the context of this report includes the proceeds from both illicit activities such as corruption (bribery and embezzlement of national wealth), criminal activity, and the proceeds of licit business that become illicit when transported across borders in contravention of applicable laws and regulatory frameworks (most commonly in order to evade payment of taxes).
1) In 2006, the most recent year of the Global Financial Integrity-[GFI] study, developing countries lost an estimated $858.6 billion to $1.06 trillion in illicit financial outflows.
2) Even at the lower end of the range of estimates, the volume of illicit financial
flows coming out of developing countries increased at a compound rate of 18.2 percent over the 5 year period analyzed for the study.
3) On average, for the five-year period of this study, Asia accounts for
approximately 50 percent of overall illicit financial flows from all developing countries.
4) This report shows that the average amount stashed away from India annually during 2002-06 is $27.3 billion. It means that during the 5 year period the amount stashed away is 27.3x5=136.5 billion. It is not that all these amounts had gone to Swiss. It has gone to different tax and secret shelters. The share of Swiss banks in dirty money being a third of the global aggregate, some $ 45 billion out of the 136.5 billion stashed away from India would have been hoarded in these years in Swiss banks. This appears in page 30 of the report mentioned above
5) The important point is that this is only for 5 years. More amounts were stashed away during the Nehruvian socialist regime. So the loot for 55 years would be several times the about money. In fact in those days the Indian rupee commanded a better value per Dollar. So fewer rupee could get more dollars. So the estimation that the Indian money stashed away may be of the order of $1.4 trillion.
c) How did the money get there in the first place? (if you could elaborate a little on this, that would be great)
There are several methods /reasons. Under invoicing/over invoicing of exports and imports and getting the balance stored abroad.Kick backs from major defense/civilian contracts. Not bringing the earnings abroad. In the olden days smuggling of Gold and illegal money. Transactions done abroad and not reported here. Hawala funds. Funds earned by artists/ Entertainment industry /sports people and stashed abroad. When you want to indulge in Adharma hundred ways are open!
d) Do you feel international terrorist organisations use the tax haven route, to send across money all over the world, to finance their nefarious activities?
Even our NSA—M.K Narayanan has spoken about it in Berlin
e) You recently wrote, “Under pressure from federal authorities, Swiss bank UBS is closing the hidden offshore accounts of its well-heeled American clients, potentially allowing their secrets to spill into the open.” Do you feel the government of India should also demand all the Indian black money in Swiss banks, back?
Of course. India should and must act. We are not a banana republic.
f) How can the government go about doing the same? What are the different ways in which it can try and get this money back?
Put it on the Global Agenda. Put it in G 20 Put it in IMF Put is in EGMONT GROUP. Also take a lead among all developing countries. Support US /German/French Efforts.
g) Do you feel Swiss authorities and other tax havens will co-operate with us on this issue, if we do take the initiative?
It is not due to our pressure but that of US which will make them co-operate. When a family is in deep financial crisis then it tries to look at the small amount saved under the sugar jar by the grandma. Same way developed economies are desperate for every dollar. Even if we do not act due to their efforts the list of crooks may be out .Then we will be in a dangerous social situation since Who’s Who of India will be there. Instead we should get it and get the funds and decide on the steps to sterilise it and punishment etc. Otherwise world will laugh at us. We will be worst than a Nigeria [Sani Abacha] or Phillipines [Markose]
h) Do you feel the government will do this, given that a lot of black money of politicians is stored in the Swiss banks?
Public pressure will make them do it. Plus the evolving global situation against Tax Havens. The money belongs to the poor farmers and unorganised workers of India.
i) Also Indian businessmen have a lot of their ill-gotten gains in these banks. Do you see pressure being applied by them on the government on not to get this money back?
The world situation is such that Indian Business man will want to bring it back now given the attractive returns in India. The entire PN route was conceived for that.
j) You wrote in your column that the German foreign intelligence agency BND got names of 1400 clients of the Liechtenstein based LTG bank who were supposed to be suspected tax evaders. Of the 1400, 600 were supposed to be Germans. Do you think of the remaining there will be Indians as well? Has the Indian government approached the German government for the list?
Indian names will be there. Our Tax evaders and crooks are like Maha Vishnu present in all continents and all tax havens in the sea, on the earth, in the air. But our Government has been lukewarm in this issue. It should have despatched immediately senior officials plus the FM to get the names.
Related News articles:
• Swiss bank money led to stock boom: Modi - http://specials.rediff.com/money/2009/mar/30slide1-swiss-bank-money-let-to-stocks-boom.htm
• 'UPA has adopted a policy of deafening silence and inaction' - http://election.rediff.com/report/2009/mar/29/loksabhapoll-upa-has-adopted-a-policy-of-deafening-silence-and-inaction.htm
• Coverage: Elections 2009 - http://www.rediff.com/election/loksabhapolls09.html
http://idlyvadai2007.googlepages.com/TaskForceReportonSwissaccounts.ப்ட்ப்
நன்றி : இட்லி வடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக